/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட கட்டுரை போட்டி கல்லுாரி மாணவிக்கு பாராட்டு
/
மாவட்ட கட்டுரை போட்டி கல்லுாரி மாணவிக்கு பாராட்டு
ADDED : பிப் 13, 2025 09:38 PM

உடுமலை,; மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவிக்கு உடுமலை அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவையொட்டி, திருப்பூர் மாவட்ட அளவில் கலை இலக்கியப்போட்டிகள் நடந்தது.
இப்போட்டிகளில், உடுமலை அரசு கலைக்கல்லுாரி மாணவர்களும் பங்கேற்றனர். இதில் கட்டுரைப்போட்டியில் முதுகலை முதலாமாண்டு தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவி சத்யா, மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு கல்லுாரி முதல்வர் கல்யாணி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து பேராசிரியர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.