/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வட்டார அளவிலான செஸ் போட்டி; மடத்துக்குளம் அரசு பள்ளி வெற்றி
/
வட்டார அளவிலான செஸ் போட்டி; மடத்துக்குளம் அரசு பள்ளி வெற்றி
வட்டார அளவிலான செஸ் போட்டி; மடத்துக்குளம் அரசு பள்ளி வெற்றி
வட்டார அளவிலான செஸ் போட்டி; மடத்துக்குளம் அரசு பள்ளி வெற்றி
ADDED : ஜூலை 22, 2025 10:00 PM
உடுமலை; உடுமலை குறுமைய செஸ் போட்டியில், மடத்துக்குளம் வட்டார அளவில் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளது.
பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு குறுமைய போட்டிகள் நடத்தப்படுகிறது.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, மாவட்ட அளவிலும், அதை தொடர்ந்து மண்டல அளவிலும், இறுதியாக மாநில அளவில் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
உடுமலையில் குறுமைய அளவிலான போட்டிகள் நடக்கிறது. செஸ் போட்டி ஒவ்வொரு வட்டாரமாக நடத்தப்பட்டது. செஸ் போட்டிகள் உடுமலை தேஜஸ் அரங்கில் நடந்தது. மடத்துக்குளம் வட்டார அளவில், 11, 14, 17, 19 நான்கு வயது பிரிவுகளில் போட்டி நடந்தது.
11 வயதினருக்கான பிரிவு மாணவர்களுக்கான போட்டியில், அக் ஷரா வித்யாலயா பள்ளி முதலிடத்திலும், மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.
மாணவியருக்கான போட்டியில், முதல் இரு இடங்களை ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப்பள்ளி மாணவியர் பிடித்தனர். வேடபட்டி ஏ.வி.எம்., பள்ளி மூன்றாமிடம் பெற்றது.
14 வயதினருக்கான பிரிவு மாணவர்களுக்கான போட்டியில், ஜே.எஸ்.ஆர்., பள்ளி முதல் மற்றும் மூன்றாமிடமும், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
மாணவியருக்கான போட்டியில், ஜே.எஸ்.ஆர்., பள்ளி முதலிடமும், சோழமாதேவி அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடம், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம் பெற்றன.
17 வயதினருக்கான பிரிவு மாணவர்களுக்கான போட்டியில், ஜே.எஸ்.ஆர்., பள்ளி முதலிடம், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம் பெற்றன.
மாணவியருக்கான போட்டியில், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்திலும், கணியூர் வெங்கடகிருஷ்ணா பள்ளி இரண்டு மற்றும் மூன்றாமிடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
19 வயதினருக்கான பிரிவு மாணவர்களுக்கான போட்டியில், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், ஜே.எஸ்.ஆர்., பள்ளி இரண்டாமிடம், வெங்கடகிருஷ்ணா பள்ளி மூன்றாமிடம் பெற்றன.
மாணவியருக்கான போட்டியில், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், கணியூர் வெங்கடகிருஷ்ணா பள்ளி மூன்றாமிடத்திலும் வெற்றி பெற்றன.