/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட அளவில் இளைஞர் திறன் திருவிழா
/
மாவட்ட அளவில் இளைஞர் திறன் திருவிழா
ADDED : நவ 24, 2024 11:08 PM
உடுமலை; மாநில அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்வாயிலாக, இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு, இளைஞர் திறன் திருவிழா நடக்கிறது.
திருப்பூர் மாவட்ட அளவில், பல்லடம் வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தில், இந்த திருவிழா நாளை (26ம்தேதி) காலை, 9:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை நடக்கிறது.
இதன் வாயிலாக, இளைஞர் திறன் பயிற்சிக்கு ஆட்கள் சேர்க்கப்பட உள்ளனர். 18 முதல் 25 வயது வரை உள்ள எட்டாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த விழாவில் பங்கேற்கலாம்.
மத்திய அரசின் தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ், 15 திறன் பயிற்சி நிறுவனங்களும், பிற திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்று திறன் பயிற்சிகளை வழங்குகின்றனர். இந்த விழாவில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, மூன்று முதல் ஆறு மாதம் வரை பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு பின், தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.
மேலும், விபரங்களை அறிந்துகொள்வதற்கு, உடுமலை- - 88381 62465, மடத்துக்குளம் - 90955 34743, குடிமங்கலம் - 79048 80886 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.