தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாவட்ட அறிவியல் மாநாடு மாணவ, மாணவியர் ஆர்வம்

மாவட்ட அறிவியல் மாநாடு மாணவ, மாணவியர் ஆர்வம்

மாவட்ட அறிவியல் மாநாடு மாணவ, மாணவியர் ஆர்வம்


UPDATED : நவ 05, 2026 11:55 PM

ADDED : நவ 04, 2026 07:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:55 PM ADDED : நவ 04, 2026 07:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூரில், 32வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு, திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் வசந்தி வரவேற்றார்.

கூட்டுறவுத் துறை சார் பதிவாளர் கார்த்திகைச்செல்வி தலைமை வகித்தார். அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பேராசிரியர் மோகனா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி பேசினார்.

மாநாட்டில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து விளக்கினர். மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 130 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில், 14 ஆய்வுக் கட்டுரைகள் மாநில மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டன.

தொடர்ந்து நடந்த நிறைவு விழாவுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க துணைச் செயலாளர் குமார் துரைசாமி, இன்ஸ்பெக்டர் காளிமுத்து ஆகியோர் பேசினர்.

மாநில மாநாடு, வரும் 27, 28, 29ம் தேதிகளில் திருப்பூர் விஜயமங்கலம் அருகே உள்ள சசூரி பொறியியல் கல்லுாரியில் நடைபெற உள்ளது. இதில், தேர்வு செய்யப்பட்ட 14 ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. மாநிலம் முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றிலிருந்து தேர்வு செய்யப்படும் மாணவர்கள், டிச. 27 முதல் 31ம் தேதி வரை சத்தீஸ்கரில் நடைபெறும் தேசிய மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us