/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட டேபிள் டென்னிஸ்; பூமலுார் அரசுப் பள்ளி அசத்தல்
/
மாவட்ட டேபிள் டென்னிஸ்; பூமலுார் அரசுப் பள்ளி அசத்தல்
மாவட்ட டேபிள் டென்னிஸ்; பூமலுார் அரசுப் பள்ளி அசத்தல்
மாவட்ட டேபிள் டென்னிஸ்; பூமலுார் அரசுப் பள்ளி அசத்தல்
ADDED : அக் 11, 2024 11:54 PM
திருப்பூர் : பள்ளிகல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட, குறுமைய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கான மாவட்ட போட்டி, மாவட்ட கல்வித்துறை விளையாட்டுப்பிரிவு சார்பில் நடத்தப்படுகிறது.
காங்கயம், நத்தக்காடையூர் பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரியில், 14, 17 மற்றும், 19 வயது பிரிவினருக்கான இருபாலர் டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. தனிநபர் பதிநான்கு மற்றும், 17 வயது பிரிவில், பூமலுார் அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடம், 19 வயது பிரிவில், பல்லடம் ஏ.வி.ஏ.டி., பள்ளி முதலிடம். இரட்டையர், 14 மற்றும், 17 வயது பிரிவில், பூமலுார் பள்ளி முதலிடம், 19 வயது பிரிவில் அவிநாசி எம்.எஸ்.வி., பள்ளி முதலிடம்.
மாணவியர் பிரிவு, தனிநபர், 14 வயது பிரிவில், பூமலுார் பள்ளி, 17 வயது பிரிவில் கொங்கு மெட்ரிக் (திருப்பூர் வடக்கு). 19 வயது பிரிவில், பல்லடம் ஏ.வி.ஏ.டி., பள்ளி முதலிடம் பெற்றது. இரட்டையர், 14 மற்றும், 17 வயது பிரிவில் பூமலுார் பள்ளி முதலிடம், 19 வயது பிரிவில் பல்லடம் ஏ.வி.ஏ.டி., பள்ளி முதலிடம் பெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற பள்ளி அணி வீரர், வீராங்கனைகள், டிச., மாதம் நடக்கவுள்ள மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர்.