sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் வழியாக இயங்கும் தீபாவளி சிறப்பு ரயில்கள்

/

திருப்பூர் வழியாக இயங்கும் தீபாவளி சிறப்பு ரயில்கள்

திருப்பூர் வழியாக இயங்கும் தீபாவளி சிறப்பு ரயில்கள்

திருப்பூர் வழியாக இயங்கும் தீபாவளி சிறப்பு ரயில்கள்


ADDED : அக் 24, 2024 11:59 PM

Google News

ADDED : அக் 24, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தீபாவளியையொட்டி, சென்னையில் இருந்து போத்தனுாருக்கு சிறப்பு ரயில் (எண்:06021) வரும், 29ம் தேதி மற்றும் நவ., 2ம் தேதி இயக்கப்படும். சென்னையில், இரவு, 7:00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் நள்ளிரவு, 1:45க்கு திருப்பூர் வரும்; அதிகாலை, 3:15க்கு போத்தனுார் செல்லும். சிறப்பு ரயில் கோவைக்கு செல்லாது; இருகூர் வழியாக போத்தனுார் செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியன்று (31ம் தேதி) மற்றும் நவ., 4ம் தேதி நள்ளிரவு, 12:15 மணிக்கு கோவையில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06022), அன்றைய தினம் காலை, 9:30க்கு சென்னை சென்று சேரும். வரும், 29ம் தேதி, மங்களூரு - சென்னை எழும்பூர் ரயில் (எண்:06047), யஷ்வந்த்பூர் - கோட்டயம் ரயில் (எண்:06215) வரும், 30ம் தேதி சென்னை எழும்பூர் - மங்களூரு ரயில் (எண்:06048), கோட்டயம் - யஷ்வந்த்பூர் ரயில் (எண்:06216) இயங்கும். ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us