/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க. மாவட்ட செயலாளர் மாற்றம்
/
தி.மு.க. மாவட்ட செயலாளர் மாற்றம்
ADDED : நவ 05, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் நேற்று திடீரென அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள அமைச்சர் சாமிநாதன் கட்சியின் துணை பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார். அவரது மாவட்ட செயலாளர் பதவி, தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த பத்மநாபனுக்கு வழங்கப்பட்டது.
அவருக்குப் பதிலாக, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு, பிற நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து கூறினர்.

