/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் : அவிநாசி ரோட்டில் அவலம்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் : அவிநாசி ரோட்டில் அவலம்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் : அவிநாசி ரோட்டில் அவலம்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் : அவிநாசி ரோட்டில் அவலம்
ADDED : நவ 05, 2025 12:20 AM

திருப்பூர்: திருப்பூர், அவிநாசி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் பங்களா ஸ்டாப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதிலிருந்து வெளியேறும் குடிநீர் பெருமளவு ரோட்டில் சென்று பாய்கிறது. அதேபோல், குமார் நகர் பகுதியில், 60 அடி ரோடு சந்திக்கும் இடத்தில் ஏற்பட்ட உடைப்பிலும் குடிநீர் வெளியேறி வீணாகிறது.
இவ்விரு, இடங்களிலும் வெளியேறும் குடிநீர் ரோட்டில் சென்று பாய்வதால் ரோடு சேதமாகிறது. மேலும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது குறித்து, மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'குமார் நகர் பகுதியில் குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது இன்று (நேற்று) இரவு சரி செய்யும் பணி ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
பங்களா ஸ்டாப் பகுதியில், 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டத்தில் சோதனை ஓட்டம் மேற்கொண்டு குடிநீர் வீணாகும் பகுதிகள் கண்டறியும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிந்த பின் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு விட்டது,' என்றனர்.

