/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு தி.மு.க., நிர்வாகியிடம் விசாரணை
/
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு தி.மு.க., நிர்வாகியிடம் விசாரணை
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு தி.மு.க., நிர்வாகியிடம் விசாரணை
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு தி.மு.க., நிர்வாகியிடம் விசாரணை
ADDED : செப் 11, 2025 03:55 AM

திருப்பூர்:திருப்பூர் அருகே போதையில் வந்தவர் கார் மோதியதில், மொபட்டில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருப்பூர் மாவட்டம், கருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 57. நேற்று மாலை, டூ - வீலரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார் திடீரென, டூ - வீலர் மீது மோதியதில், பழனிசாமி பரிதாபமாக இறந்தார். காரில் இருந்தவர் போதையில் இருப்பது தெரிந்தது. பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்த அவர், வேகமாக காரை ஓட்டி தப்பினார்.
மங்கலம் போலீசார் விசாரித்தனர். அதில், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றது, சாமளாபுரம் தி.மு.க.,வை சேர்ந்த பேரூராட்சி தலைவரான விநாயகா பழனிசாமி, 60, என தெரிந்தது. போலீசார், அவரை விசாரணைக்கு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
விபத்தை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர் கூறுகையில், 'கருகம்பாளையத்தில் தி.மு.க., கொடியுடன், 'பொலிரோ' கார் ஒன்று வேகமாக வந்து, மொபட்டில் வந்தவர் மீது மோதியது. நான் சத்தம் போட்டும் கூட, அது நிற்காமல் சென்று விட்டது. நானும் அருகில் இருந்தவர்களும் ஓடிச்சென்று, காயமடைந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்தோம். ஆனால், அவரிடம் எந்த ரியாக் ஷனும் இல் லை. அதற்குள் ஆம்புலன்ஸ் வந்தது. அதில், அவரை ஏற்றி சென்று விட்டனர்,'' என்றார்.