ADDED : செப் 14, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமை வகித்தார். தெற்கு நகர செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். நகர, ஒன்றிய மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தி.மு.க.,வின் முப்பெரும் விழாவை கொங்கு மண்டலத்தில் கரூரில் நடத்த அனுமதியளித்த கட்சி தலைமைக்கு நன்றி தெரிவிப்பது, விழாவில் திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் பொதுமக்களை திரட்டிச் சென்று பங்கேற்க வைப்பது, செப்., 15ம் தேதி அண்ணா துறை பிறந்த நாள் விழாவில், அனைத்து பூத்களிலும் கட்சி தலைமை அறிவித்தபடி உறுதிமொழி ஏற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.