/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி தொ.மு.ச., நிர்வாகி ஆரூடம்
/
தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி தொ.மு.ச., நிர்வாகி ஆரூடம்
தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி தொ.மு.ச., நிர்வாகி ஆரூடம்
தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி தொ.மு.ச., நிர்வாகி ஆரூடம்
ADDED : மார் 07, 2024 04:48 AM

திருப்பூர், : திருப்பூர், ஈரோடு மாவட்ட தொ.மு.ச., பேரவை சார்பில், லோக்சபா தேர்தல் பிரசாரம் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு, தெற்கு மாநகர தி.மு.க., செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபால் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு பின், தொ.மு.ச., பேரவை பொது செயலாளர் சண்முகம் கூறுகையில், ''லோக்சபா தேர்தலில், யாருக்கு ஓட்டளிக்க வேண்டும். இண்டியா கூட்டணி வெற்றி பெற எவ்வாறு பாடுபட வேண்டும் என்பது குறித்து தொழிலாளர்களுக்கு விளக்கப்பட்டது. தி.மு.க., கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்,'' என்றார்.