sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நவீன சிறகு விரித்த தொழில்நுட்பம் ஆட்கொள்ளும் 'டாலர் சிட்டி'யின் மதிநுட்பம்

/

நவீன சிறகு விரித்த தொழில்நுட்பம் ஆட்கொள்ளும் 'டாலர் சிட்டி'யின் மதிநுட்பம்

நவீன சிறகு விரித்த தொழில்நுட்பம் ஆட்கொள்ளும் 'டாலர் சிட்டி'யின் மதிநுட்பம்

நவீன சிறகு விரித்த தொழில்நுட்பம் ஆட்கொள்ளும் 'டாலர் சிட்டி'யின் மதிநுட்பம்

1


ADDED : ஆக 09, 2025 11:59 PM

Google News

ADDED : ஆக 09, 2025 11:59 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ டுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாராக, புதிய தொழில்நுட்பம் மிகவும் அவசியம் என்பதை, திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் நன்கு அறிந்தவர்கள். திருப்பூர், காங்கயம் ரோடு, 'டாப்லைட்' வளாகத்தில் நடைபெற்றுவரும், 23வது 'நிட்ேஷா' கண்காட்சியில், பிரின்டிங் பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆடைகளை வடிவமைக்க பயன்படுத்தப்படும் தையல் மெஷின்கள், 'ரோப்' உற்பத்தி செய்யும் கருவிகள், எலாஸ்டிக் உற்பத்தி இயந்திரங்கள், நிறுவனங்களின் பெயருடன் எலாஸ்டிக் உற்பத்தி செய்யும் கருவிகள், பிரின்டிங் 'இங்க்' வகைகள், எம்ப்ராய்டரிங் என, பல்வேறு நவீன இயந்திரங்களுடன் கண்காட்சி களைகட்டிக்கொண்டிருக்கிறது.

பின்னலாடை பிரின்டிங் மதிப்புக்கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பில், பிரின்டிங் மிக முக்கியமானது. 'ஸ்கிரீன்' பிரின்டிங், 'டிஜிட்டல்' பிரின்டிங் மெஷின்கள் நவீன வசதிகளுடன் வந்துள்ளன. ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பிரின்டிங் இயந்திரங்களுக்கு துணியை எடுத்து வைக்கும், 'ரோபோ'க்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெஷின்களை இயக்கி பார்க்கும் வசதி இருப்பதால், நேரடியாக பிரின்டிங் செய்தும் சரிபார்க்கின்றனர். அருகிலேயே, பிரின்ட் செய்த படக்காட்சிகளை பிரேமில் வைத்து, சில நிறுவனங்கள் மினி கண்காட்சி போலவும் அலங்கரித்துள்ளன. பிரின்டிங் 'இங்க்'கின் தரத்தையும், படக்காட்சிகளாக பார்த்து அறிய முடிகிறது.

'நிட்டிங்' இயந்திரங்கள் தற்போதைய செயற்கை நுாலிழை துணி உற்பத்தியில், 'நிட்டிங்' இயந்திரங்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. ஒரே மெஷினில், பல்வேறு ரக பேப்ரிக்குகளை உற்பத்தி செய்யும் வசதியுடன் மெஷின்கள், கண்காட்சியில் சுழன்று ஓடிக்கொண்டிருக்கின்றன. வழக்கமான மெஷின்களில் இருந்து, என்னென்ன புதுமை வந்துள்ளது என்பதை, அங்குள்ள பணியாளர்கள் தெளிவாக எடுத்துக்கூறுவது, பார்வையாளருக்கு பயனுள்ளதாக இருக்கிறது; 'விற்பனை ஆகிவிட்டது' என்ற அறிவிப்பு பலகைகளையும் நேற்று காண முடிந்தது.

'எம்ப்ராய்டரிங்' சாகசம் ஆடை வடிவமைப்பில், எம்பிராய்டரிங் சில நேரம் அவசியமாகிறது; வழக்கமாக, கலர் நுால்களை கொண்டு எம்ப்ராய்டரிங் செய்வது மட்டுமல்ல, 'சீக்குவன்ஸ்' எனப்படும், குண்டுமணி போன்ற பல வண்ண பாசிகளை கொண்டு எம்ப்ராய்டரிங் செய்யும் மெஷின்கள் அதிகம் உள்ளன; குறிப்பாக, அதிவேக மெஷின்கள், தொழில்துறையினரின் விசாரணைக்கு வந்துள்ளன.

'ஸ்டிக்கர் - எலாஸ்டிக்' உள்ளாடைகள் தயாரிப்பில், பெயர் பொரிக்கப்பட்ட எலாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாதது. அதிலும், உள்ளாடைகளில் ஒட்டும், 'ஸ்டிக்கர்' பிரின்ட்கள் அதிகம் உள்ளன. மேலும், சிறிய அளவு துணிகளில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆடைகளின் விவரங்களை அச்சிட்டு 'லேபிளாக' வழங்கும் மெஷின்களும் உள்ளன.

'கட்டிங்' மெஷின்கள் மேகலா மெஷின்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்து, சிறப்பு விற்பனைக்கு வைத்துள்ள, 'கட்டிங்' மெஷின்களும் கண்காட்சியில் உள்ளன; பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான மெஷின்களை, ஒரே ஸ்டாலில் பார்வையாளர்கள் விசாரித்து, புதிய தொழில்நுட்பத்தை கேட்டு வருகின்றனர்.

'ஆட்டோமேஷன் சூயிங்' மெஷின் ஆடை வடிவமைக்கும், 'சூயிங்' மெஷின்களில், தானியங்கி இயந்திரங்கள் அதிகம் வந்துள்ளன. ஆப்பரேட்டர் இயக்கினாலும், 'சாப்ட்வேர்' மூலம் பதிவு செய்துவிடுவதாலும், கேமரா கண்காணிப்பு இருப்பதாலும், தானியங்கி முறையில் ஆடைக்கான பாகங்களை நேர்த்தியாகவும், துல்லியமாகவும் இணைக்கின்றன. பாக்கெட் இணைக்கும் மெஷின், காலர் இணைக்கும் மெஷின், 'டி-சர்ட்' பட்டி தைக்கும் மெஷின், 'காஜா - பட்டன்' தைக்கும் மெஷின்கள், 'டி-சர்ட்' அடிப்பாகத்தை மடித்து தைக்கும் மெஷின்கள், 'கங்காரு பாக்கெட்' எனப்படும், 'ஆடையின் முன்பக்க பாக்கெட் இணைக்கும் புதிய மெஷின்களும் விதவிதமாக வந்துள்ளன.

'வென்டிலேஷன் பேன்'கள் பின்னலாடை நிறுவனங்களில், தொழிலாளர் வசதிக்காகவும், வெப்பத்தை குறைக்கவும், 'வென்டிலேஷன் பேன்' பயன்பாடு அதிகரித்துள்ளது. மேற்கூரையில் பொருத்தும் வென்டிலேட்டர், பக்கவாட்டில் இருந்து பொருத்தி, 'ஏசி' போல் இயக்கும் வென்டிலேட்டர், பெரிய அளவிலான, 'பெடஸ்டல் பேன்'களும், சுவற்றில் பொருத்தும் மின்விசிறிகளும் உள்ளன.

சோலார் நிறுவனங்கள் அழைப்பு 'இன்னுமா கரன்ட் பில்' கட்றீங்க...' என்று கேட்கும் வகையில், சோலார் வினியோகஸ்தர்களும் ஸ்டால் அமைத்து, தங்கள் விற்பனையை வேகப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, அரசு மானியத்துடன் சோலார் அமைக்கும் திட்டம் குறித்தும் வைத்துள்ளனர். அதில், ஒரு கிலோவாட்டுக்கு, 30 ஆயிரம் வீதம் மானியம் பெறலாம் என்றும் தெரிவிக்கின்றன.

மணிக்கு 450 'டி-சர்ட்' 'போல்டிங்' மெஷின்கள் மிக சிறிய அளவில் வந்துள்ளன. அதன் மூலம், தயாரிக்கப்பட்ட 'டி-சர்ட்' போன்ற ஆடைகளை வைத்தால், தானியங்கி முறையில், மடித்து, பாலிபேக்கில் பேக்கிங் செய்து கொடுக்கும் 'போல்டிங்' மெஷின்கள் வந்துள்ளன; அவற்றை கொண்டு, ஒரு மணி நேரத்துக்கு, 450 'டி-சர்ட்'களை மடித்து பேக்கிங் செய்ய முடியும். இதன்மூலமாகவும், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கலாம்.

ைஹ - லிங்க் பிரின்டிங் பிரின்டிங்கில் புதிய வரவு போல, சில ஸ்டால்களில் சிறிய அளவிலான பிரின்டிங் மெஷின்கள் வந்துள்ளன. மெஷினில், எழுத்து அல்லது உருவம், மற்றும் இங்க் வகைகளை 'செட்' செய்து விட்டால், ஒரு பகுதியில் ஆடையை வைக்கும் போது, நேரடியாக ஆடையில், எழுத்துக்களை 'பிரின்ட்' செய்துவிடுகிறது.

ேஹங்கரில் இவ்ளோ விஷயமா? பெரிய இயந்திரங்கள், ஆடைகள், இங்க் வகைகள் என, பல்வேறு ஸ்டால்கள் இருந்தாலும், ஆடைகளை காட்சிப்படுத்த பயன்படுத்தம், 'ேஹங்கர்' ஸ்டால்களும் அமைந்துள்ளது. பிரத்யேகமாக, புதிய வடிவில் தயாரிக்கப்படும் ேஹங்கர், அவற்றின் உதிரி பாகங்களும், பட்டன்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் தளவாடங்கள் பின்னலாடை நிறுவனங்கள், சாய ஆலைகள் மற்றும் பல ஆலைகளிலும், பனியன் பொருட்களை எடுத்துச்செல்ல, பெரிய பிளாஸ்டிக் தொட்டி பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, தண்ணீர் தொட்டி, மேடை போன்ற பகுதி, பொருட்களை நகர்த்தி செல்லும் சிறிய வண்டி, சிறிய பெட்டிகள், பிளாஸ்டிக் ரெடிமேடு கழிப்பறைகள், 'வாட்ச்மேன்' ரூம், குப்பை தொட்டி போன்ற பெட்டிகளும், சிறிய பக்கெட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us