sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அடிப்படை பிரச்னைகளுக்கு விவாதிக்க வாய்ப்பு! கிராம சபையை 'மிஸ்' பண்ணாதீங்க

/

அடிப்படை பிரச்னைகளுக்கு விவாதிக்க வாய்ப்பு! கிராம சபையை 'மிஸ்' பண்ணாதீங்க

அடிப்படை பிரச்னைகளுக்கு விவாதிக்க வாய்ப்பு! கிராம சபையை 'மிஸ்' பண்ணாதீங்க

அடிப்படை பிரச்னைகளுக்கு விவாதிக்க வாய்ப்பு! கிராம சபையை 'மிஸ்' பண்ணாதீங்க


ADDED : அக் 10, 2025 10:19 PM

Google News

ADDED : அக் 10, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; திடக்கழிவு மேலாண்மை முடக்கம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட குளறுபடிகள் என கிராமங்களில் தொடர்கதையாக இருக்கும் பிரச்னைகள் குறித்து இன்று (11ம் தேதி) ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபைகளில் மக்கள் பங்கேற்று விவாதிப்பது அவசியமாகும்.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில், பல்வேறு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல், பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.

சுத்தமாக இல்லை கிராம குடியிருப்புகளில், மட்கும், மட்காத குப்பையை தரம் பிரித்து வாங்கி, இயற்கை உரம் தயாரிக்க, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மத்திய, மாநில அரசு சார்பில், செயல்படுத்தப்படுகிறது.

எந்த ஊராட்சியிலும், இத்திட்டம் முழுமையாக செயல்படாமல் முடங்கியுள்ளது. உரம் தயாரிப்பு குடில்களும் காட்சிப்பொருளாக மாறி விட்டன. இன்றைய கிராம சபை கூட்டத்தில், 11 வது விவாத பொருளாக துாய்மை பாரத இயக்க திட்டம் குறித்து விவாதிக்கவும், தீர்மானம் நிறைவேற்றவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை நிறைவேற்ற, தங்கள் கிராமத்தில் திட்டத்தின் நிலை குறித்து மக்கள் கேள்வி எழுப்பலாம்.

இதையும் கேளுங்க தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஊராட்சிக்கும், மாதந்தோறும், பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பணிகள் தேர்வு, தொழிலாளர் ஒதுக்கீடு குறித்து, வெளிப்படையான விபரங்கள் தெரிவிக்கப்படுவதில்லை.

முக்கிய பிரச்னைகள் குறித்து, மக்கள் புகார் தெரிவித்தாலும், மனு கொடுத்தாலும், ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பதில்லை; முறையாக பதிலும் தெரிவிப்பதில்லை. இத்தகைய முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், புகார் தெரிவிக்கவும், அதற்கான பதில் கிடைக்கவும், கிராம சபை கூட்டங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

கிராமங்களில், அடிப்படை தேவைகளுக்கான பணிகளை தேர்வு செய்தல், ஜாதி பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல், மழை நீர் சேகரிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட 14 தீர்மான பொருட்கள் குறித்த கிராம சபையில், விவாதிக்கப்படுகிறது. எனவே கிராம மக்கள் இன்று நடக்கும் கிராம சபையை 'மிஸ்' பண்ணாமல், பங்கேற்க வேண்டும்.






      Dinamalar
      Follow us