/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலைத்திருவிழாவில் அசத்திய மாணவர்கள்; அரசு கல்லுாரியில் உற்சாகம்
/
கலைத்திருவிழாவில் அசத்திய மாணவர்கள்; அரசு கல்லுாரியில் உற்சாகம்
கலைத்திருவிழாவில் அசத்திய மாணவர்கள்; அரசு கல்லுாரியில் உற்சாகம்
கலைத்திருவிழாவில் அசத்திய மாணவர்கள்; அரசு கல்லுாரியில் உற்சாகம்
ADDED : அக் 10, 2025 10:22 PM

உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இரு கட்டங்களாக நடத்தப்பட்ட கலைத்திருவிழா போட்டியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
தமிழக அரசு, உயர்கல்வி துறையின் கீழ், அரசு கல்லுாரி மாணவ, மாணவியரின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில், கலைத்திருவிழா நடத்த உத்தரவிட்டது.
மொழித்திறன், தொழில்நுட்பத்திறன், கலைத்திறன் ஆகியவற்றை மையப்படுத்திப் போட்டிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், செப்., 16ல், கலைத்திருவிழா துவங்கி, கடந்த 9ம் தேதி நிறைவு பெற்றது.
கவிதை, பேச்சு, போட்காஸ்ட், வர்ணனை, பாட்டு, அலங்கார வடிவமைப்பு, தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் போட்டி, நாடகம், டிஜிட்டல் போஸ்டர் வடிவமைத்தல், பாடல்வரிகள் எழுதுதல், குறும்படம், இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
கலைத்திருவிழாவின் நிறைவு நாளில், நெருப்பில்லாமல் சமைத்தல், புதையல் வேட்டை, ஒவ்வொரு பூக்களுமே,' என்ற தலைப்பில் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து அதனுடைய வரலாற்றைச் சொல்லும் போட்டி ஆகிய மூன்று போட்டிகள் நடத்தப்பட்டன.
கலைத்திருவிழாவில், மொத்தம், 30 போட்டிகள் நடத்தப்பட்டு, 1,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் கலைச்செல்வன் (தமிழ்த்துறை), அனீஸ்பாத்திமா (இயற்பியல் துறை), மரகதம்(வணிகவியல் துறை) செய்திருந்தனர்.