/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் சுத்திகரிப்பு கருவி: தெற்கு ரோட்டரி வழங்கல்
/
குடிநீர் சுத்திகரிப்பு கருவி: தெற்கு ரோட்டரி வழங்கல்
குடிநீர் சுத்திகரிப்பு கருவி: தெற்கு ரோட்டரி வழங்கல்
குடிநீர் சுத்திகரிப்பு கருவி: தெற்கு ரோட்டரி வழங்கல்
ADDED : நவ 05, 2025 12:21 AM

திருப்பூர்: திருப்பூர் தெற்கு ரோட்டரி கிளப் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் தெற்கு ரோட்டரி கிளப் சார்பில், 12 இடங்களில், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. அவ்வகையில், நேற்று திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் வடக்கு தாலுகா அலுவலகம் ஆகிய இரு இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. ரோட்டரி உறுப்பினர்கள் நவமணி மற்றும் பொன்னுசாமி ஆகியோர் வழங்கினர்.
ரோட்டரி கவர்னர் தனசேகர் திறந்து வைத்தார். தெற்கு ரோட்டரி கிளப் தலைவர் தமிழரசு, முன்னாள் தலைவர்கள் மோகனசுந்தரம், சக்திவேல் மற்றும் ராமசாமி, ராம்குமார் பாலாஜி, தங்கமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

