/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் தர பரிசோதனை பயிற்சி முகாம்
/
குடிநீர் தர பரிசோதனை பயிற்சி முகாம்
ADDED : ஜன 09, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, ;குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சுய உதவி குழு பெண்களுக்கு குடிநீர் தர பரிசோதனை முகாம் நடந்தது.
குடிநீர் வடிகால்வாரியம் சார்பில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு, குடிநீர் தர பரிசோதனை முகாம் நடந்தது.
குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமை, பி.டி.ஓ., சுப்ரமணியம் துவக்கி வைத்தார். ஊராட்சிகள் பி.டி.ஓ., பாரதி கண்ணன் தலைமை வகித்தார்.
சென்னிமலை அஸ்வத் தொண்டு நிறுவன பயிற்சியாளர்கள் சியாமளா, சோனியா, ஜீவிதா உள்ளிட்டோர் பயிற்சியளித்தனர்.

