ADDED : ஆக 24, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
‘தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேஷன்’ சார்பில் திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய மனுவில், குடிநீரை பயன்படுத்துவதற்கு முன்பே கட்டணம் வசூலிப்பதாகவும், திருப்பூர் மாநகராட்சியை விட, பூண்டி நகராட்சியில் 50 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் மேல்நிலை, கீழ்நிலை தொட்டிகளை காலமுறைப்படி சுத்தம் செய்து, குடிநீர் வினியோக நேரத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்; இதனால் பணிக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க முடியும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
