UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 11:57 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: பெருந்துறைக்கு இன்று முதல்வர் செல்வதால், திருப்பூர் மாவட்டத்தில், ‘ட்ரோன்’ பறக்க கலெக்டர் தடை விதித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார்.
இதையொட்டி, முதல்வர் திருப்பூர் மாவட்டம் வழியாக ஈரோடு மாவட்டத்துக்கு செல்ல உள்ளதால், அவர் செல்லும் வழிகளில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
