/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் கழுத்தை அறுத்த போதை ஆசாமி கைது
/
பெண் கழுத்தை அறுத்த போதை ஆசாமி கைது
ADDED : செப் 26, 2025 06:33 AM
திருப்பூர்; திருப்பூரில், பெண்ணை கழுத்தை அறுத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
திருப்பூர், பல்லடம் ரோடு வித்யாலயாவை சேர்ந்தவர் அய்யனார், 50. இவரது மனைவி ஜெயராணி, 45. குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெயராணி நேற்று மாலை வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர், கத்தியால் அழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு, ஜெயராணியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கழுத்தை அறுத்த நபர், தென்னம்பாளையம் அருகே தடுத்து நிறுத்தி ஜெயராணியிடம் தகராறு செய்தார். இதுகுறித்து தகவலறிந்த வீரபாண்டி போலீசார், பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போதை ஆசாமியிடம் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கத்தியால் அறுக்கப்பட்ட பெண்ணுக்கு, கைது செய்யப்பட்டுள்ள செல்வகுமார், 52 என்பவருக்கு இடையே கடந்த, ஒரு ஆண்டாக பழக்கம் இருந்தது. இதையறிந்த கணவர், மனைவியை கண்டித்தார். இதனால், அவருடன் பேசுவதை தவிர்த்தார். இச்சூழலில், வீட்டில் துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம், போதையில் சென்ற செல்வகுமார் தகராறு செய்து, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். அங்கிருந்து தப்பியவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் மீண்டும் தடுத்து நிறுத்தி தகராறு செய்தது தெரிந்தது. அவரை கைது செய்தோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.