/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போதை இல்லா தமிழ்நாடு' விழிப்புணர்வு கண்காட்சி
/
'போதை இல்லா தமிழ்நாடு' விழிப்புணர்வு கண்காட்சி
ADDED : நவ 06, 2024 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ; திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், 'போதையில்லா தமிழகம்' எனும் தலைப்பில், விழிப்புணர்வு கண்காட்சி நேற்று கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கண்காட்சியை துவக்கி வைத்தார். மாணவ செயலர்கள் செர்லின், கிருஷ்ணமூர்த்தி, நவீன் குமார், ஜெயலட்சுமி, ரேவதி, சந்தோஷினி ஆகியோர் தலைமையில், மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து, காட்சிப்படுத்தியிருந்தனர். கல்லுாரியின் பிற துறை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கண்காட்சி அரங்கை பார்வையிட்டனர்.