/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதை தடுப்பு பிரசாரம்; என்.எஸ்.எஸ்., விழிப்புணர்வு
/
போதை தடுப்பு பிரசாரம்; என்.எஸ்.எஸ்., விழிப்புணர்வு
போதை தடுப்பு பிரசாரம்; என்.எஸ்.எஸ்., விழிப்புணர்வு
போதை தடுப்பு பிரசாரம்; என்.எஸ்.எஸ்., விழிப்புணர்வு
ADDED : ஜன 09, 2025 12:15 AM
திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில், போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் பேசுகையில், ''எதிர்கால இந்தியாவை கட்டமைக்க காத்திருக்கும் மாணவர்களாகிய நீங்கள் போதைக்கு அடிமையாக கூடாது. உடல் உறுப்புகள் செயலிழந்து, புற்றுநோய் ஏற்படுகிறது. போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப நம்மால் இயன்ற ஆலோசனையை வழங்க வேண்டும்,' என்றார்.
மாணவர்கள் முகத்தில் வர்ணம் பூசி, விழிப்புணர்வு பதாகை ஏந்தி, துண்டு பிரசுரம் கொடுத்து,'போதை பழக்கம் வேண்டாம்' என்ற கோஷங்களை எழுப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

