ADDED : ஜன 26, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீசன் நிறைவு தருவாயை எட்டியதால், மார்கழி துவங்கியது முதலே உழவர் சந்தைக்கான முருங்கை வரத்து குறைந்தது.
தை பிறந்தும், வரத்து குறைவு தொடர்ந்ததால், ஒரு கிலோ, 180 முதல், 240 ரூபாய்க்கும், ஒரு முருங்கை, 15 ரூபாய் வரையும் விற்பனையானது. கடந்து பத்து நாட்களாக உழவர் சந்தைக்கு முருங்கைக்காய் முழுமையாக வருவதில்லை. காய்கறிகள் விலை பட்டியலில் இருந்தே முருங்கைக்காய் பெயர் அகற்றப்பட்டு விட்டது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து வெளிமார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் முருங்கைக்காய் மொத்த காய்கறி மார்க்கெட்டில் கிலோ, 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

