/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதையில் அத்துமீறல் வீட்டில் புகுந்து 'ஓய்வு'
/
போதையில் அத்துமீறல் வீட்டில் புகுந்து 'ஓய்வு'
ADDED : அக் 19, 2025 09:18 PM
திருப்பூர்: காங்கயம் முத்துார் ரோட்டை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, 53. இவரது வீட்டின் மாடியில் அறை உள்ளது. இரு நாட்களுக்கு முன் நுழைந்த போதை ஆசாமி, மாடி அறையில் தங்கினார். தொடர்ந்து, சொந்த வீட்டை போல கழிவறை, பெட்ரூம் ஆகியவற்றை பயன்படுத்தி கொண்டு போதையில் அங்கேயே துாங்கினார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் வீட்டின் உரிமையாளர் ஈஸ்வரமூர்த்தி, மாடிக்கு சென்றார். அங்கு போதை ஆசாமி துாங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். காங்கயம் போலீசார் சென்று விசாரித்தனர்.
அதில், ஏணி வியாபாரியான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வினித்குமார், 34 என்பது தெரிந்தது. அவரை காங்கயம் போலீசார் கைது செய்தனர்.