/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிரடி காட்டியது பட்டாசு விற்பனை
/
அதிரடி காட்டியது பட்டாசு விற்பனை
ADDED : அக் 19, 2025 09:18 PM
திருப்பூரில், இரண்டு வாரம் முன்பே பட்டாசு விற்பனை துவங்கினாலும், கடந்த நான்கு நாட்களாக தான் பட்டாசு கடைகளில் கூட்டத்தை காண முடிகிறது. நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்று மாலை வரை தான் அதிக விற்பனை நடந்தது. இன்று மதியம் துவங்கி கூடுதல் விற்பனை நடக்கும். இன்று நள்ளிரவு வரை பட்டாசு கடைகள் செயல்படும் என்பதால், விற்பனை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு பட்டாசு விற்பனை அதிகமாக இருக்கும் என்று பட்டாசு விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மழை இல்லாவிட்டால் விற்பனை உயரும்
தீபாவளிக்கு முதல் மூன்று நாட்கள் தான் பட்டாசு விற்பனையே. இரு தினங்களாக மழை, இரவிலும் மழை பெய்ததால், வாடிக்கையாளர்கள் குறைந்தளவே வந்தனர். தீபாவளி நாளிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பலர் பட்டாசுகளை அதிகமாக வாங்கிச் செல்ல யோசிக்கின்றனர். ஒரு வாரம் முன்பே 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பட்டாசுகளை வாங்கி இருப்பு வைப்பவர்களால் ஓரளவு வர்த்தகம் நடந்துள்ளது. கிப்ட்பாக்ஸ் விற்பனை பரவாயில்லை. மொத்தமாக, 40 சதவீதம் விற்பனையாகியுள்ளது. இன்றும், நாளையும் விற்பனை உள்ளதால், 95 சதவீத பட்டாசுகள் விற்று விடுமென எதிர்பார்த்துள்ளோம். மழை இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் அதிகமாக விற்பனை நடந்திருக்கும்.
- முருகேசன், பட்டாசு விற்பனையாளர், வஞ்சிபாளையம் ரோடு.
மத்தாப்பு, புஸ்வாணம் குட்டீஸ் ஆர்வம்
அதிக ஒலி எழுப்ப கூடிய வெடிகளை விட, மத்தாப்பு, புஸ்வாணம் விற்பனை தான் அதிகமாக உள்ளது. புதிதாக விற்பனைக்கு வந்துள்ள பட்டாசுகளை தேடி பிடித்து வாங்குவதில் குட்டீஸ் ஆர்வம் செலுத்துகின்றனர். பட்டாசு பட்டியலில் மெனுவில் இருக்கும் பட்டாசுகளை தவிர்த்து, வேறு புதிய பட்டாசுகளையும் கேட்கின்றனர். பிற பட்டாசுகளை விட மல்டி கலர் புஸ்வாணம், கம்பி மத்தாப்பூ, பிற மத்தாப்பு ரகங்கள் தான் அதிகமாக விற்பனையாகியுள்ளது. மெட்ரோ டிரெயின், கிட்ஸ் டிராவல் பஸ், கோல்டன் டக், ஸ்கை ஷாட், கார், கடாயுதம் உள்ளிட்ட புதிய பேன்சி ரக பட்டாசு ரகங்களால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு பட்டாசு விற்பனை அதிகமாகியுள்ளது. முன்கூட்டியே பட்டாசு வாங்கி வெடித்து பார்த்தவர் மீண்டும், அதே பட்டாசை தேடி வந்து வாங்குகின்றனர்.
- ஸ்ரீனிவாசன், பட்டாசு விற்பனையாளர், பூண்டி - பூலுவப்பட்டி ரிங் ரோடு.
தி ருப்பூரில், இரண்டு வாரம் முன்பே பட்டாசு விற்பனை துவங்கினாலும், கடந்த நான்கு நாட்களாக தான் பட்டாசு கடைகளில் கூட்டத்தை காண முடிகிறது. நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்று மாலை வரை தான்அதிக விற்பனை நடந்தது. தீபாவளி நாளான, இன்று நள்ளிரவு வரை பட்டாசு கடைகள் செயல்படும் என்பதால், விற்பனை அதிகரிக்க அதிக வாய்ப்புகள்உள்ளன. கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு பட்டாசு விற்பனைஅதிகமாக இருக்கும் என்று பட்டாசு விற்பனையாளர்கள் நம்பிக்கைதெரிவிக்கின்றனர்.