/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமை அங்கீகாரம் வேண்டும்; எதிர்நோக்கும் சாய ஆலைகள்
/
பசுமை அங்கீகாரம் வேண்டும்; எதிர்நோக்கும் சாய ஆலைகள்
பசுமை அங்கீகாரம் வேண்டும்; எதிர்நோக்கும் சாய ஆலைகள்
பசுமை அங்கீகாரம் வேண்டும்; எதிர்நோக்கும் சாய ஆலைகள்
ADDED : ஜூன் 05, 2025 01:37 AM

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத 'ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை, திருப்பூர் சாய ஆலைகள் பின்பற்றி வருகின்றன. சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக்கு பிறகு, ஒரு சொட்டு கழிவுநீர் கூட வெளியேற்றப்படுவதில்லை. இறுதியாக, 'ஸ்லெட்ஜ்' மற்றும் 'மிக்சர் சால்ட்' என, 0.5 சதவீதம் திடக்கழிவு உருவாகிறது.
'ஸ்லெட்ஜ்'ஜை, டன் ஒன்றுக்கு, 4,500 ரூபாய் செலவு செய்து, சிமென்ட் ஆலைகளுக்கு சாய ஆலைகள் அனுப்பிவைக்கின்றன. 'மிக்சர் சால்ட்' டன் கணக்கில் குவிந்துள்ளன. இவற்றை அப்புறப்படுத்த வழி தெரியாமல், சாய ஆலைகள் விழிபிதுங்கி போயுள்ளன.
ஒரே ஒரு நிறுவனம், முறையான அனுமதி பெற்று, 'மிக்சர் சால்ட்'டை எடுத்து செல்கிறது; அதற்கும், டன் ஒன்றுக்கு, 6,500 ரூபாய் வரை செலவிட்டு வருகின்றனர்.
'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை திருப்பூர் பலத்த பொருட்செலவில் செய்து வருகிறது. இருப்பினும், அதற்கான பசுமை அங்கீகாரம் கிடைத்தபாடில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக எவ்வளவு செலவு செய்ய தயாராக இருந்தாலும், அதற்கான சரியான வழிகாட்டுதலும், வழிமுறையும் இறுதி செய்யப்படவில்லை.
தமிழக அரசும், சுற்றுச்சூழல் பாதுகாப்புதுறையும், திருப்பூர் சாய ஆலைகள் சந்தித்து வரும் திடக்கழிவு அப்புறப்படுத்தும் சவாலுக்கு சரியான தீர்வு கண்டறிய முன்வர வேண்டும். அப்போதுதான், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்பட்டதாக மாறும் என்பது, சாய ஆலைகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.