/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய ஆலை நிறுவ முதலீட்டு மானியம் முதல்வருக்கு சாய ஆலை சங்கம் நன்றி
/
புதிய ஆலை நிறுவ முதலீட்டு மானியம் முதல்வருக்கு சாய ஆலை சங்கம் நன்றி
புதிய ஆலை நிறுவ முதலீட்டு மானியம் முதல்வருக்கு சாய ஆலை சங்கம் நன்றி
புதிய ஆலை நிறுவ முதலீட்டு மானியம் முதல்வருக்கு சாய ஆலை சங்கம் நன்றி
ADDED : ஆக 23, 2025 11:57 PM

திருப்பூர் : சாய ஆலைகள் நிறுவ, 25 சதவீத முதலீட்டு மானிய திட்டம் அறிவித்த முதல்வருக்கு, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஜவுளித்துறை வளர்ச்சிக்காக, மத்திய அரசு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (டப்) திட்டத்தில், மூலதன முதலீடுகளுக்க, மானியம் வழங்கி வந்தது. இத்திட்டம், 2022 மார்ச் 31 ம் தேதியுடன் முடிந்தது; திட்டம் நீட்டிக்கப்படவில்லை. புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மாநில அரசுகள், தொழில் பாதுகாப்புக்காக புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி, தமிழக ஜவுளித்துறை வளர்ச்சிக்காக, ஜவுளிஉற்பத்தியில் முக்கிய அங்கம் வகிக்கும் சாய ஆலைகளுக்கு, முதலீட்டு மானியம் வழங்க வேண்டுமென, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு புதிய சாய ஆலைகள் நிறுவவும், ஏற்கனவே இயங்கி வரும் ஆலைகளை விரிவாக்கம் செய்யவும், 25 சதவீத முதலீட்டு மானியம் வழங்கப்படுமென அரசாணை வெளியிட்டுள்ளது. முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, முதலீட்டு மானியம் வழங்க, 268 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய திட்டம் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், முதல்வரை சந்தித்து நன்றி கூறினர். ஈரோடு, கரூர், மதுரை மாவட்ட ஜவுளி சங்க பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.
---
புதிதாக, 25 சதவீத முதலீட்டு மானிய திட்டம் அறிவித்ததற்காக, தமிழக முதல்வரை, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து நன்றி கூறினர். அருகில், அமைச்சர் சாமிநாதன்.