/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.வி.பி., பள்ளியில் கல்வி உற்சவம்
/
ஏ.வி.பி., பள்ளியில் கல்வி உற்சவம்
ADDED : நவ 08, 2025 12:58 AM

திருப்பூர்: திருப்பூர், காந்தி நகரில் உள்ள ஏ.வி.பி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், 2025 - 2026ம் ஆண்டுக்கான கல்விக்கண்காட்சி, 'கல்வி உற்சவம் -2026' என்ற பெயரில் நடந்தது.
பள்ளி முதல்வர் ராஜேஷ் வரவேற்றார். மழலையர் வகுப்பு துவங்கி, மேல்நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவியர், 1,650க்கும் அதிகமானோர் பங்கேற்று, பல்வேறு பாடங்கள் தொடர்புடைய பல்வேறு தலைப்புகளின் கீழ், 1,400க்கும் அதிகமான தங்களது படைப்புகளை செய்து காண்பித்து, காட்சிப்படுத்தி செயல் விளக்கமளித்தனர்; அவை, பார்வையாளர்களை ஈர்த்தது.
பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களின் படைப்புகளை பாராட்டி பேசுகையில், ''தன்னம்பிக்கையும், ஊக்கமும் தான் வெற்றிக்கு முதல் படி'' என்று விழிப்புணர்வு ஏற்படுத்திார்.
விழாவில், ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை வகித்தார். பொருளாளர் லதா கார்த்திகேயன், முன்னிலை வகித்தார்.
பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, ராஜலட்சுமி, பள்ளியின் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளியில் உள்ள அனைத்து துறை சார்ந்த ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

