/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைப்பு சீரமைப்பு; போக்குவரத்து ஸ்தம்பிப்பு
/
குழாய் உடைப்பு சீரமைப்பு; போக்குவரத்து ஸ்தம்பிப்பு
குழாய் உடைப்பு சீரமைப்பு; போக்குவரத்து ஸ்தம்பிப்பு
குழாய் உடைப்பு சீரமைப்பு; போக்குவரத்து ஸ்தம்பிப்பு
ADDED : நவ 08, 2025 12:58 AM

திருப்பூர்: திருப்பூர், காங்கயம் சாலையில், ராக்கியாபாளையம் பிரிவு பகுதியில், குழாய் உடைப்பால், குடிநீர் ரோட்டில் வழிந்து வீணாகியது.
இதனை சீரமைக்கும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. மணியகாரம்பாளையம் செல்லும் ரோட்டில் இந்த குழாய் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக மணியகாரம்பாளையம் ரோட்டில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
பணி நடைபெறும் ராக்கியாபளையம் பிரிவில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. மணியகாரம்பாளையம் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பணி நடக்கும் நிலையில், இந்த ரோட்டில் வாகனங்கள் திரும்பிச் செல்வதில்லை. இருப்பினும் போக்குவரத்து சிக்னலில் எந்த மாற்றமும் செய்யாமல் வழக்கம் போல் சிக்னல் இயங்குகிறது.
இதனால், காங்கயம் ரோட்டில் இரு திசையிலும் நேராகச் செல்லும் வாகனங்கள் இந்த சிக்னலில் வாகனங்கள் திரும்பாத நிலையிலும் கூட தேவையில்லாமல் காத்திருந்து கடந்து செல்லும் நிலை காணப்படுகிறது.
வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் போக்குவரத்து சிக்னலில் உரிய மாற்றம் செய்தால் இந்த சிக்கல் ஏற்படாது.

