/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டரி பள்ளி மாணவி குத்துச்சண்டையில் அபாரம்
/
ரோட்டரி பள்ளி மாணவி குத்துச்சண்டையில் அபாரம்
ADDED : நவ 08, 2025 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் (14 வயது பிரிவு) திருப்பூர் தெற்கு ரோட்டரி மெட்ரிக் பள்ளி மாணவி ஜஹானா, பங்கேற்று முதலிடம் பெற்றார்.
இதனால், அவர் மாநில அளவில் நடக்கவுள்ள போட்டிக்கு தேர்வாகியுள்ளார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி ஜஹானாவை பள்ளி தாளாளர் ஜெயபாலன், பள்ளி முதல்வர் ராமர், நிர்வாக அதிகாரி பாரதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் வாழ்த்தினர்.

