நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ஊத்துக்குளியில் கடந்த, 23ம் தேதி ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதிக்கு சென்ற ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், ஊத்துக்குளி, வடுகபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், 64 என்பதும், அவர் அந்த பகுதியில் உள்ள ரைஸ் மில்லில் தொழிலாளியாக வேலை செய்வது தெரிந்தது.
மேலும், ரைஸ் மில்லில் வேலைக்கு சென்ற ஆறுமுகம் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க செல்ல தண்டவாளத்தை கடந்த போது, அவ்வழியாக வந்த ரயில் மோதி பரிதாபமாக இறந்தது தெரிந்தது. திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

