நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், இலவந்தி கிராமம், தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 57; அரிசி கடை வைத்துள்ளார். வழக்கம் போல் இரவில் கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்று விட்டார். காலையில் சென்று பார்த்த போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்ததில், கடையில் வைத்திருந்த, 8 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. அதேபோல அதற்கு அருகில் உள்ள வாசு, 30 என்பவரின் சலுான் கடையில் இருந்த ஆயிரம் ரூபாயும் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

