/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட பா.ஜ., சார்பில் தேர்தல் ஆலோசனை
/
மாவட்ட பா.ஜ., சார்பில் தேர்தல் ஆலோசனை
ADDED : மார் 17, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;பா.ஜ., சார்பில் லோக்சபா தேர்தல் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் நேற்று நடந்தது.
மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர்கள் வினோத் வெங்கடேஷ், ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டசபை தொகுதியில், தேர்தல் மையக் குழு மற்றும் 24 விதமான தேர்தல் பணிகளுக்கான பணிக்குழு ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலை கையாளும் முறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கோவை தொகுதிக்கு உட்பட்ட மாநில, மாவட்ட,மண்டல நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.

