ADDED : ஜூலை 20, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் பிரிவு (டவுன் ஹால்) உதவி மின் பொறியாளர் அலுவலகம், யூனியன் மில்ரோடு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மின்கோட்ட செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் (பொ) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருப்பூர் கோட்டம், திருப்பூர் உபகோட்டத்துக்கு உட்பட்ட, டவுன்ஹால் உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏ.பி.டி., ரோடு, எல்.ஆர்.ஜி., லே அவுட் முதல் வீதி என்ற முகவரியில் இருந்து, 147, சடையப்பன் கோவில் பின்புறம் (மணியன் குறுக்கு வீதி), யூனியன் மில்ரோடு, திருப்பூர், என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது,' என்று தெரிவித்துள்ளார்.