நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : காங்கயம், திருப்பூர் ரோடு பாரதியார் வீதியை சேர்ந்தவர் காதர் பாட்சா, 28. நேற்று காலை டூவீலரில் காங்கயம் திருப்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அதே திசையில், 45 சிமென்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக, லாரியின் இடது புறம் சென்ற போது, காதர் பாட்சா நிலை தடுமாறி டூவீலரில் இருந்து லாரியின் முன்பக்க சக்கரத்தில் மோதி கீழே விழுந்தார்.
லாரியின் சக்கரங்கள் ஏறியதில் பரிதாபமாக இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.