ADDED : ஜன 01, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தாராபுரம் - திருப்பூர் ரோட்டில், குண்டடத்துக்கு செல்லும் பிரிவு ரோட்டில் பாலம் அருகே தங்க நகைகள் வைக்கப்படும் சிறிய, பெரிய காலி பெட்டிகள், பார்சல்கள் உள்ளிட்டவை ஆங்காங்கே சிதறி கிடந்தன.
இதைப் பார்க்கும் போது, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் யாராவது, பங்கு போட்டு கொண்டு, காலி பெட்டிகளை துாக்கி வீசி சென்றார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட போலீசார் விசாரித்து, உண்மை நிலவரத்தை அறிய வேண்டும்.

