/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு : ஊருக்கு செல்வதற்கு சிக்கல்
/
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு : ஊருக்கு செல்வதற்கு சிக்கல்
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு : ஊருக்கு செல்வதற்கு சிக்கல்
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு : ஊருக்கு செல்வதற்கு சிக்கல்
ADDED : அக் 25, 2025 01:23 AM

அவிநாசி: அவிநாசி அ.குரும்பபாளையம் கிராமத்தில், நீரோடை நீர்வழிப் பாதையை தனியார் ஆக்கிரமித்து அடைத்து வைத்ததால் ஊருக்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வரு கின்றனர்.
வேட்டுவபாளையம் ஊராட்சி, அ.குரும்பபாளையத்தில் இருந்து சேவூர், அவிநாசிசெல்லும் வழியில் பல ஆண்டுகளாக நீரோடை நீர்வழிப் பாதை பயன்பாட்டில் இருந்தது.
மழைக்காலங்களில் பெருகிவரும் மழைநீர், அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள பாலம் வழியாக கடந்து கருமாபாளையம் குட்டைக்கு செல்லும் வகையில் நீர்வழிப்பாதை உள்ளது.
அ.குரும்பாளையத்தில் தனியார் ஆக்கிரமிப்பு காரணமாக, மழை நீர் வழியில் தேங்கி, பாதை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விட்டது. இந்த பிரச்னை குறித்து, கடந்த, 10 மாதங்களுக்கும் மேலாக பலமுறை ஊராட்சி நிர்வாகம், அவிநாசி தாசில்தார் ஆகியோரிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இந்த பாதையை கடந்து நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி, கல்லுாரி ஆகியவற்றுக்கு சென்று வருகின்றனர். விவசாயிகள் பல்வேறு பயன்பாட்டுக்காக தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் கூட்டுறவு சொசைட்டிக்கு பால் விற்பனை செய்யும் விவசாயிகள் பலர் உள்ளனர். இவர்கள் மழை நீரில் வழுக்கி விழுந்து, பால் கொட்டி இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ள நீரோடை நீர்வழிப் பாதையை மீட்டு, தார் ரோடு அமைக்கவேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

