ADDED : ஏப் 26, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்: காங்கயம், கீரனுார் - கவளக்காட்டு வலசைச் சேர்ந்தவர், துரைசாமி, 59. டிரைவராக உள்ளார்.
அவரது இளைய மகன் லோகேஷ்வரா, 24. ஈரோடு மாவட்டத்தில் தனியார் இன்ஜி., கல்லுாரியில் படிக்கும் போது, கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தது. இருப்பினும் தனது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என தந்தையிடம் வருத்தமாக தெரிவித்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லோகேஷ்வரா வீட்டின் மேற்கூரையில் சேலையால் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.