/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ.பி.எப்., குறைதீர் கூட்டம் நாளை உடுமலையில் நடக்குது
/
இ.பி.எப்., குறைதீர் கூட்டம் நாளை உடுமலையில் நடக்குது
இ.பி.எப்., குறைதீர் கூட்டம் நாளை உடுமலையில் நடக்குது
இ.பி.எப்., குறைதீர் கூட்டம் நாளை உடுமலையில் நடக்குது
ADDED : நவ 26, 2025 05:36 AM
உடுமலை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், பங்குதாரர்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம் நாளை உடுமலையில் நடக்கிறது.
இது குறித்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன திருப்பூர் மண்டல வைப்பு நிதி ஆணையாளர் அபிேஷக்ரஞ்சன் கூறியிருப்பதாவது:
பங்குதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, குறை தீர்ப்பு கூட்டம் மாவட்டந்தோறும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் சார்பில், நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்துக்கான குறை தீர்ப்பு கூட்டம் நாளை, (27ம் தேதி) உடுமலை ஸ்ரீ சீனிவாசா வித்யாலயா மெட்ரிக்., பள்ளியில் நடக்கிறது.
இ.பி.எப்., உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ., ஐ.பி., க்கள், முதலாளிகள், ஓய்வூதியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர், தங்கள் குறைகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் இருந்தால், அவற்றின் விபரங்களுடன், காலை, 10:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை நடை பெறும் முகாமில், விண்ணப்பிக்கலாம்.
தனிப்பட்ட உறுப்பினர் அல்லது ஓய்வூதியம் பெறுபவர், குறைகளுக்கு தீர்வு பெற, அவர்களின் யு.ஏ.என்., எண்., அல்லது வைப்பு நிதி கணக்கு எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், இ.எஸ்.ஐ., ஐ.பி., எண் கொண்டு வர வேண்டும்.
கூடுதலாக, இ.பி.எப்.ஓ., தொடர்பான குறைகளை, ro.tiruppur@epfindia.gov.in என்ற இ-மெயிலிலும், இ.எஸ்.ஐ.சி.,க்கு, benefit---srokovai@esic.nic.in என்ற இ-மெயிலிலும், விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

