/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏர்னெஸ்ட் அகாடமி பள்ளி ஆண்டு விழா
/
ஏர்னெஸ்ட் அகாடமி பள்ளி ஆண்டு விழா
ADDED : ஜூலை 22, 2025 12:16 AM

திருப்பூர்; அவிநாசியில் உள்ள தி ஏர்னெஸ்ட் அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியின், 15வது ஆண்டு துவக்க விழா, மாணவ தலைவர்கள் அறிமுக விழா நடந்தது.
பள்ளி முதல்வர் டாக்டர் லலிதா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, ரமா பங்கேற்றார். டீ பப்ளிக் பள்ளி முதல்வர் புவனேஸ்வரி பங்கேற்று பேசினார்.
தேர்தல் முறையில், 2025-26ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ தலைவர் மற்றும் துணை தலைவர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து பள்ளி விளையாட்டுத்துறை சார்பில் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்ட மாணவ குழுவிற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணை தலைவர் பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, உணவுத்துறை, ஒழுக்கம், கல்வி என பல்வேறு துறைகளுக்கு மாணவ தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. பின், மாணவ தலைவர்கள் உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.
விழாவில் மாணவ, மாணவியரின் பரதம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் சந்திரன், இயக்குனர் டோரத்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.