/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைச்சரிடம் வேண்டுகோள்
/
இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைச்சரிடம் வேண்டுகோள்
ADDED : ஜூலை 17, 2025 10:44 PM
அனுப்பர்பாளையம்; கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்ற தொழில்துறையினர், வக்கீல்கள், மருத்துவர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.
இதில், திருமுருகன்பூண்டி அருகேயுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையை முழு செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தொழில் துறைக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். வீடு மற்றும் இடம் வாங்குவதற்கான கடன் பெறுவதில் உள்ள நடைமுறையை எளிதாக்க வேண்டும். பிரதம மந்திரியின் காப்பீட்டை மாநில அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்பது உட்பட ஒவ்வொரு துறையினரும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அனைத்து கோரிக்கைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் முருகன் உறுதி கூறினார். கூட்டத்தில், அறிவுசார் பிரிவு கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., பொருளாளர் டாக்டர் சுந்தரன், மாநில சிந்தனையாளர் பிரிவு செயலாளர் கணியாம்பூண்டி செந்தில், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அனந்தகிரி ரங்கசாமி, நீலகிரி எம்.பி., தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார், துணை பொறுப்பாளர் கதிர்வேலன் உட்பட பலர் பங்கேற்றனர்.
n அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள ரோட்டரி அரங்கில் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கான மண்டல நிர்வாகிகள் கூட்டம், நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலைவகித்தார்.
நகர தலைவர்கள் சண்முகபாபு (பூண்டி), ரமேஷ் (அவிநாசி), ஒன்றிய தலைவர்கள் பிரபு ரத்தினம், பிரேமா மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.