/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூஜை விதிமுறைகள் மாணவருக்கு விளக்கம்
/
பூஜை விதிமுறைகள் மாணவருக்கு விளக்கம்
ADDED : டிச 27, 2025 06:52 AM

அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள திருப்புக்கொளியூர் அவிநாசி ஸ்ரீ வாகீசர் மடாலயத்தில், ஸ்ரீஸ்ரீ வேத ஆகம ஆய்வு நிறுவனம், சம்பந்த சிவாச்சார்யார் சிவாகம சம்சோதன சபை மற்றும் ஸ்ரீ வாகீசர் மடாலயம் இணைந்து, சிவாலய சைவாகம பூஜாக்ரம பயிற்சி முகாமை நடத்தி வருகின்றன.
முகாமின், 5ம் நாளான நேற்று ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் நடந்தது. பெங்களூரூ வேத ஆகம பாடசாலை சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் ஆசியுரை வழங்கினார்.
பெங்களூரூ ஸ்ரீஸ்ரீ வேதாகம ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர், டாக்டர் அபிராமசுந்தரம் குரு சிஷ்ய பரம்பரை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
குரும்பலுார் பஞ்சநதீஸ்வரர் கோவில், அர்ச்சகர் ஸ்ரீ கார்த்திகேய சிவம், பூஜை விதிமுறைகள் குறித்தும், பவித்ரோத்ஸவ விதி என்ற தலைப்பில் கோவில்களில் பவித்ரோத்ஸவத்தை கடைபிடிக்க வேண்டிய காரணத்தையும், அதன் பயன்களையும் விளக்கினார்.
ஆசார்யலக் ஷணம் என்ற தலைப்பில் சிவன்மலை ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில் ஸ்ரீசிவசுந்தர சிவம், நித்யபூஜா ப்ராயச்சித்த விதி என்ற தலைப்பில் ஸ்ரீ சம்பந்த குருக்கள் மற்றும் புதுச்சேரி பிரெஞ்ச் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர் ஸ்ரீஅரவிந்த சிவம் ஆகியோர் விளக்கம் அளித்தனர். ஸ்ரீ முரளி பட்டாச்சார்யார் நன்றி கூறினார்.

