/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மா.கம்யூ., கட்சி சார்பில் விளக்க பேரவை கூட்டம்
/
மா.கம்யூ., கட்சி சார்பில் விளக்க பேரவை கூட்டம்
ADDED : மார் 01, 2024 10:53 PM

உடுமலை:உடுமலையில், மா.கம்யூ., கட்சியின் நகரக்குழு சார்பில், கட்சி நிதியளிப்பு விழா மற்றும் அரசியல் விளக்கப்பேரவை கூட்டம் நடந்தது.
விழாவுக்கு, மா.கம்யூ., நகர செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் வரவேற்றார்.
கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''மத்திய அரசு, தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, நிவாரணம் வழங்க பல முறை வலியுறுத்தியும், குறைந்தபட்ச நிதியே ஒதுக்கப்பட்டது. விவசாயிகளின் பிரச்னைகளையும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை,'' என்றார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உண்ணிகிருஷ்ணன், மதுசூதனன் உள்ளிட்ட பலர் பேசினர். கட்சியின் நகரக்குழு உறுப்பினர் விஸ்வநாதன் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக தமிழக அரசின் அம்பேத்கர் விருது பெற்ற, மத்தியக்குழு உறுப்பினர் சண்முகத்துக்கு கட்சியின் சார்பில் பஸ் ஸ்டாண்ட் அருகே, வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

