/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கனரா வங்கி சார்பில் ஏற்றுமதியாளர் சந்திப்பு
/
கனரா வங்கி சார்பில் ஏற்றுமதியாளர் சந்திப்பு
ADDED : ஜூலை 09, 2025 11:02 PM

திருப்பூர்; கனரா வங்கி சார்பில், ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சி, திருப்பூர் - தாராபுரம் ரோட்டிலுள்ள ஜி.ஜி., ஓட்டலில் நடைபெற்றது.
கனரா வங்கியின் மதுரை மண்டல பொதுமேலாளர் பூமா தலைமைவகித்தார். கனரா வங்கி திருப்பூர் சரக தலைவர் அனுபமாபானு வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், ஏற்றுமதி பரிவர்த்தனைகளை எளிதாக்குவதில் கனரா வங்கியின் பங்களிப்பு குறித்தும்; 40 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம், வரும் ஆண்டுகளில் அதிக இலக்குகளை அடையும் எனவும் பேசினார்.
கூட்டத்தில், ஏற்றுமதியாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கனராவின் மதுரை மண்டல துணை பொதுமேலாளர் ஸ்ரீசந்தீப்குமார் சின்ஹா நன்றி கூறினார்.