/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு?
/
ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு?
ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு?
ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு?
ADDED : செப் 02, 2025 11:22 PM
திருப்பூர்; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்வது உறுதியாகி உள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துக்கு, 2025 - 26 முதல், 2027- 28ம் ஆண்டு காலத்திற்கான நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
தற்போதைய அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தவிர வேறு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், தற்போதைய நிர்வாகிகளே மீண்டும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல் வழிகாட்டுதலின் படி, தற்போதைய தலைவர் சுப்பிரமணியன் மற்றும் ஆறு நிர்வாக குழு உறுப்பினர்கள், 30 செயற்குழு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, கடைசி தேதி வரை வேறு வேட்பாளர்கள் போட்டியிட முன்வராததால், போட்டியின்றி தேர்வு நடக்க உள்ளது.
இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'அனைத்து நிர்வாகிகளும் இணைந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக மேலும், உற்சாகமாகவும், செயல்திறனுடனும் பணியாற்ற கடமைப்பட்டுள்ளோம்.
எங்களின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். முக்கியமாக, அமெரிக்கா விவகாரம் குறித்து, உரிய தீர்வை நோக்கி பயணித்து அதில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பணியாற்றுவோம்,' என்றனர்.