/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2வில் கூடுதல் தேர்ச்சி சதவீதம்; பெருமாநல்லுார், கருவலுார் அரசு பள்ளிகள் அபாரம்
/
பிளஸ் 2வில் கூடுதல் தேர்ச்சி சதவீதம்; பெருமாநல்லுார், கருவலுார் அரசு பள்ளிகள் அபாரம்
பிளஸ் 2வில் கூடுதல் தேர்ச்சி சதவீதம்; பெருமாநல்லுார், கருவலுார் அரசு பள்ளிகள் அபாரம்
பிளஸ் 2வில் கூடுதல் தேர்ச்சி சதவீதம்; பெருமாநல்லுார், கருவலுார் அரசு பள்ளிகள் அபாரம்
ADDED : மே 13, 2025 11:41 PM
திருப்பூர் : பிளஸ் 2 தேர்வு முடிவில் பெருமாநல்லுார், கருவலுார் அரசு பள்ளிகள் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது. குன்னத்துார், கொடுவாய் அரசு பள்ளிகள் தேர்ச்சி சரிவை சந்தித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில், கடந்த, 2023ல், 100 சதவீத தேர்ச்சியை பெற்றது கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி, 2024ல், தேர்வெழுதிய 74 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 69 மாணவியரில், மூவர் தேர்ச்சி பெறவில்லை. 97.90 சதவீத தேர்ச்சியே பெற முடிந்தது.
நடப்பாண்டு, 61 மாணவர், 61 மாணவியர், 122 பேர் தேர்வெழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்று, நுாற்றுக்கு நுாறு சதவீதம் தேர்ச்சியை இப்பள்ளி பெற்றுள்ளது.
குன்னத்துார் 'சறுக்கல்'
2023ம் ஆண்டை விட, 13.64 சதவீதம் கூடுதலாக பெற்று, 2024ல் சென்டம் ரிசல்ட் தந்தது, குன்னத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி. தேர்வெழுதிய, 172 மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். நடப்பாண்டு, 197 மாணவியர் தேர்வெழுதி, இருவர் தேர்ச்சி பெறவில்லை.
தக்க வைத்த படியூர்
கடந்த, 2023ஐ விட, 7.26 சதவீத தேர்ச்சி கூடுதலாக பெற்று, 98.17 சதவீதத்தை, 2024 ல் எட்டி பிடித்தது, படியூர் அரசு மேல்நிலைப்பள்ளி. தேர்வெழுதிய, 51 மாணவியரும், தேர்ச்சி பெற்று, சென்டம் தந்தனர். மாணவர் சதவீதம், 96.55. நடப்பாண்டு, 81 மாணவர், 59 மாணவியர் என, 140 பேர் தேர்வெழுதினர்; மாணவரில் ஐந்து பேரும், மாணவியரில், ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை; பள்ளி, 98.31 சதவீதத்தை பெற்றது.
கோட்டை விட்ட கொடுவாய்
2024ல் தேர்வெழுதிய, 43 மாணவர், 94 மாணவியர் உட்பட, 137 பேரும் தேர்ச்சி பெற்றதால், நுாற்றுக்கு நுாறு சதவீதத்தை கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றது. நடப்பாண்டு, மாணவியர், 79 பேரும் தேர்ச்சி பெற்றனர்; நான்கு மாணவர் தேர்ச்சி பெறவில்லை. சதவீதம், நுாறில் இருந்து, 97.32 ஆக குறைந்து விட்டது.
பெருமாநல்லுார் அசத்தல்
பெருமாநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி, 2023 ல், 92.36 சதவீத தேர்ச்சி பெற்றது; 2024ல், 95.51. நடப்பாண்டு, 237 மாணவர் தேர்வெழுதி, 228 பேர் தேர்ச்சி; ஒன்பது பேர் தேர்ச்சி பெறாததால், 96.20 சதவீதமே பெற முடிந்தது. இருப்பினும், முந்தைய ஆண்டை விட, 0.69 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது.
பெருமாநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 2023 ல், 96.19 சதவீதம் பெற்றது. 2024 ல், 94.95 சதவீதம். நடப்பாண்டு, 276 மாணவியர் தேர்வெழுதி, ஆறு பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 97.10. கடந்த, 2023ல், 198 மாணவியரே தேர்வெழுதினர்; நடப்பாண்டு, 276 மாணவியர் தேர்வெழுதியுள்ளனர்; இருந்த போதும், முந்தைய ஆண்டை விட, 2.15 சதவீதம் கூடுதல் தேர்ச்சியை இப்பள்ளி பெற்றுள்ளது.