ADDED : ஆக 14, 2025 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், ; திருப்பூர், 46வது வார்டில், வி.ஜி.வி., கார்டன் உள்ளது. 20வது வீதியில் ரோட்டோரம் இருந்த ஒரு பெரியமரம் நேற்று காலை திடீெரன அடியோடு முறிந்து ரோட்டின் குறுக்கில் சரிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்களோ, பாதசாரிகளோ அந்த இடத்தைக் கடக்கவில்லை. இதனால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. முறிந்து விழுந்த மரத்தின் கீழ் குருசாமி என்பவர் தள்ளு வண்டியில், லாண்டரி கடை வைத்துள்ளார். அவரது தள்ளு வண்டி மரம் முறிந்து விழுந்தததில் சேதமானது.
சேதமான தள்ளு வண்டிக்கு பிரபு என்ற பனியன் நிறுவன உரிமையாளர், 3 ஆயிரம் ரூபாய் உதவியாக வழங்கினார். இதனை குருசாமிக்கு வழங்க பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்தனர்.