/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெயில் தாக்கத்தால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு: விலையும் சரிவதால் விவசாயிகள் அதிர்ச்சி
/
வெயில் தாக்கத்தால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு: விலையும் சரிவதால் விவசாயிகள் அதிர்ச்சி
வெயில் தாக்கத்தால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு: விலையும் சரிவதால் விவசாயிகள் அதிர்ச்சி
வெயில் தாக்கத்தால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு: விலையும் சரிவதால் விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : மார் 17, 2024 12:52 AM

உடுமலை;பட்டுக்கூடு விலை கடும் சரிவை சந்தித்துள்ளதோடு, வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் உற்பத்தி பாதித்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
உடுமலை, பல்லடம், பொள்ளாச்சி, பழநி உள்ளிட்ட பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில், 2,778 ஏக்கர் பரப்பளவில், மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு, 1,221 பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக, மாதம் தோறும், பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.
முட்டை தொகுதிகள், இளம் புழு வளர்ப்பு மனைகளில், முட்டை பொரித்து, 7 நாட்கள் பராமரித்து, பட்டுக்கூடு உற்பத்தி மனை அமைந்துள்ள விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பட்டு புழு வளர்ப்பு மனைகளில், 21 நாட்களில், புழு வளர்ந்து, கூடு கட்டி, விற்பனைக்கு தயாராகிறது.
தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பட்டுக்கூடு உற்பத்தி பாதித்துள்ளது. பால்புழுக்கள் இறப்பு, மல்பெரிக்கு நீர் பற்றாக்குறை, பகல் நேரங்களில் புழு சோர்வடைவது உள்ளிட்ட காரணங்களினால், 40 சதவீதம் வரை உற்பத்தி பாதித்துள்ளது. 100 முட்டை தொகுதிகளுக்கு, 100 கிலோ கூடு கிடைத்து வந்த நிலையில், தற்போது, 60 கிலோ மட்டுமே பட்டுக்கூடு கிடைக்கிறது. அதே போல், விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. சராசரியாக, ஒரு கிலோ, 650 முதல், 700 ரூபாய் வரை விற்ற விலையில், தற்போது, 450 முதல், 500 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால், பெரும்பாலான பட்டு புழு வளர்ப்பு மனைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
இடு பொருள், உபகரணங்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், உற்பத்தி செலவு ஒரு கிலோவுக்கு, 600 ரூபாய் வரை ஏற்படுகிறது. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக, மகசூல் பெருமளவு குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக விலையும் சரிந்துள்ளது.பெரும்பாலான விவசாயிகள் தொழிலை கைவிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பட்டுக்கூடுகளுக்கு ஆதார விலை நிர்ணயிக்கவும், சர்வதேச அளவில் விற்பனை செய்யும் வகையில் சந்தை வாய்ப்புகள், விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள், இடு பொருட்கள் மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

