/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிளை கால்வாய் பராமரிப்பு; விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கிளை கால்வாய் பராமரிப்பு; விவசாயிகள் எதிர்பார்ப்பு
கிளை கால்வாய் பராமரிப்பு; விவசாயிகள் எதிர்பார்ப்பு
கிளை கால்வாய் பராமரிப்பு; விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 15, 2025 09:16 PM
உடுமலை; பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்தில், பூலாங்கிணறு கிளை வாய்க்கால் வாயிலாக, 6 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பி.ஏ.பி., பிரதான கால்வாயில், சர்க்கார்புதுார் ஷட்டரிலிருந்து இந்த கிளைக்கால்வாய் பிரிந்து செல்கிறது.
கிளை கால்வாயின் கடைமடை பகுதியாக குடிமங்கலம் ஒன்றிய பகுதிகள் அமைந்துள்ளன. இந்த கால்வாய் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. இதனால், வாய்க்கால் கரை பல இடங்களில், சேதமடைந்து, பரிதாப நிலையில் உள்ளது.
குறிப்பாக, வாய்க்காலில், தண்ணீர் அழுத்தம் சீராக செல்ல கட்டப்பட்ட 'சொலீஸ்' அமைப்புகளில், அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பில் தண்ணீர் தேங்கும் போது, உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விரயம் அதிகரிக்கிறது.
இதே போல், பகிர்மான கால்வாய் ஷட்டர் பகுதியிலும் பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை. கடந்த பாசனத்தின் போது, கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
எனவே கால்வாயில், தண்ணீர் விரயத்தை குறைக்கும் வகையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.