/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூக்கள் சாகுபடிக்கு வழிகாட்டுதல் விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
பூக்கள் சாகுபடிக்கு வழிகாட்டுதல் விவசாயிகள் எதிர்பார்ப்பு
பூக்கள் சாகுபடிக்கு வழிகாட்டுதல் விவசாயிகள் எதிர்பார்ப்பு
பூக்கள் சாகுபடிக்கு வழிகாட்டுதல் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 13, 2025 11:46 PM
உடுமலை : பூக்கள் சாகுபடிக்கு தேவையான நாற்றுகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை தோட்டக்கலைத்துறை வாயிலாக வழங்க உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், குறிப்பிட்ட சில சீசன்களை இலக்கு வைத்து, கோழிக்கொண்டை, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
சில இடங்களில், மல்லி, அரளி போன்ற சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இருப்பினும், இச்சாகுபடியில், போதிய தொழில்நுட்ப வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. தேவையான விதை, நாற்றுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: பூ சாகுபடியில், ஈடுபட ஆர்வம் இருந்தாலும் போதிய வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை, ராமநாதபுரம், நிலக்கோட்டை பகுதியில் இருந்து வாங்கி வருகிறோம். கோழிக்கொண்டை சாகுபடியில், நோய்த்தாக்குதலால், மகசூல் பாதிக்கிறது. எனவே உள்ளூர் தேவைக்கு தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, தமிழக அரசு, பூக்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை வாங்கவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கவும், சிறப்பு மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.