/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூச்சி மருந்துடன் போராடிய விவசாயிகள்; அரசு அலுவலகத்தில் பரபரப்பு
/
பூச்சி மருந்துடன் போராடிய விவசாயிகள்; அரசு அலுவலகத்தில் பரபரப்பு
பூச்சி மருந்துடன் போராடிய விவசாயிகள்; அரசு அலுவலகத்தில் பரபரப்பு
பூச்சி மருந்துடன் போராடிய விவசாயிகள்; அரசு அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : ஆக 04, 2025 08:04 PM

உடுமலை; பாசன நீர் கேட்டு, பூச்சி மருந்துடன், உடுமலை பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால், பரபரப்பு நிலவியது.
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில், கொங்கல்நகரம் பகிர்மான கால்வாயில், பாசன காலம் துவங்கியுள்ளது. இதில், கடை தொட்டியின் வலது வாய்க்கால் வழியாக செல்லும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட விவசாயிகள், நேற்று உடுமலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை, பூச்சி மருந்துடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறுகையில், 'ஒவ்வொரு பாசன காலத்திலும் போராடியே தண்ணீர் பெறுகிறோம். வாழ்வாதாரத்தை இழந்துள்ள எங்களுக்கு இனி போராட தெம்பில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசு அலுவலகத்திலேயே பூச்சி மருந்தை குடிக்கும் நிலை ஏற்படும்,' என்றனர்.
விவசாயிகள் போராட்டத்தால், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.